நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவோம்! மகிந்த ராஜபக்ச

Report Print Navoj in அரசியல்
62Shares

இந்த நாட்டு மக்களின் பாதுகாப்பையும், நாட்டின் பாதுகாப்பையும் நாங்கள் பலப்படுத்துவோம் என எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - வாழைச்சேனை, பேத்தாழை இளந்தளிர் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

இந்த நாட்டில் பால் உற்பத்தியை அதிகரித்து பாடசாலை மாணவர்களுக்கு பாலினை நாம் வழங்கினோம். இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தததும் பாலின் விலை அதிகரித்துள்ளது.

அதேபோன்று வெளிநாட்டில் இருந்து கொண்டு வந்த கறவைப் பசுக்கள் இங்கு இறந்து போய் எமது உள்ளூர் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.

இப்போது பாலின் விலையை விட நீரின் விலை அதிகம். இங்கு பால் பண்ணையார்கள் செல்வதற்கு வழி இல்லை. பண்ணையார்களுக்கு இந்த அரசாங்கம் எந்த உதவியும் வழங்கவில்லை. இப்போது கறவைப் பசுக்களுக்கு உண்பதற்கு உணவும் இல்லை. புற தரைகள் கூட இல்லை. இவர்கள் வனாந்தரங்கள் அல்லது வனங்களுக்கு செல்ல வேண்டி இருக்கும்.

இப்போது யானைகளின் தொல்லைகள் அதிகம். இது பற்றி இந்த அரசாங்கம் சிந்திப்பதில்லை. இப்போது நீங்கள் தனிமையில் உள்ளீர்களா என்று இரவில் வந்து பார்க்கின்றார்கள். அதுவும் ஒரு வழமையாகி விட்டது.

நாங்கள் விவசாயிகளின் விவசாய நிலங்களை பெற்றுக் கொடுத்தோம். காணிப் பிரச்சினை மற்றும் நிலப் பிரச்சினைகள் பாரிய பிரச்சினையாக உள்ளது.

60 ரூபாவிற்கு இருந்த நெல் விலையை நாங்கள் நியாயமான விலைக்கு பெற்றுக் கொடுத்தோம். 3,500 ரூபாய் பெறுமதியான உரப் பொதியை 350 ரூபாவிற்கு பெற்றுக் கொடுத்தோம்.

இந்த அரசாங்கம் 350 ரூபாய் உரப்பொதியை இரத்து செய்தது. நான் 51 நாள் பிரதமராக இருந்த போது மீண்டும் 350 ரூபாய் உர பொதியை வழங்கினேன். அது எல்லாம் அன்று நடந்தது.

நாங்கள் இந்த உரப்பொதியை இலவசமாக வழங்குவதற்கு இந்த சந்தர்ப்பத்தில் உறுதி வழங்குகின்றேன். நெல் உற்பத்தி அதிகம் என்று நெல் உற்பத்தியை அரசாங்கம் தடை செய்தது. மத்தளை விமான நிலையம் நெல் களஞ்சியசாலையாக மாறி விட்டது.

இப்போது யாழ்ப்பாணத்திற்கும் நெல் களஞ்சியசாலை வந்துள்ளது. தற்போது யாழ்ப்பாணத்திலும் சர்வதேச விமான நிலையம் வந்துள்ளது.

அங்கே ஒன்றும் நடந்ததில்லை. இந்த நாட்டு மக்களின் அச்ச உணர்வை நீக்க வேண்டும். தற்போது நாட்டு மக்களுக்கு தங்களது பிரார்த்தனைகளில் ஈடுபடுவதற்கு பயம் உள்ளது. ஏற்கனவே நாங்கள் அச்சம் இல்லாத நாட்டை உருவாக்கினோம்.

சுதந்திரமாக பயணிக்கக் கூடிய வழியை நாம் ஏற்படுத்தினோம். ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தில் அடிபணிந்து, பயத்தோடு வாழ்ந்த நிலைமையை மாற்றினோம்.

ஈஸ்டர் குண்டு தாக்குதலிற்கு பின்னர் ஒருவருக்கு ஒருவர் அச்சம் ஏற்பட்டது. இப்படி எம்மால் வாழ முடியாது. சமூகத்திற்கிடையில் இருக்கின்ற பயத்தினை இல்லாமல் செய்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.