ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய உடனேயே நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தயாராகி வருகிறார்.
இதற்கான சந்திப்புக்கள் பேச்சுக்கள் ஏற்கனவே நடந்துமுடிந்துள்ளன.
ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் சென்று இன்று நாடு திரும்பும் ஜனாதிபதி இதற்கான முனைப்பை தொடர்ந்தும் மேற்கொள்ளவுள்ளார்.
இதன் அடிப்படையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா அந்த பதவியில் இருந்து விலகவுள்ளார்.
அவருக்கு ஊவா மாகாண ஆளுநர் பதவி வழங்கப்பட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
எனினும் தாம் ஊவா மாகாண ஆளுநர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என்று ஆளுநர் மைத்ரி குணரட்ன மறுப்பு தெரிவித்துள்ளார்.
இது ஜனாதிபதியின் நாடாளுமன்ற பிரவேசத்தை தற்காலிகமாக தாமதப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற போதும் அவர் எப்படியாயினும் நாடாளுமன்றம் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.