மைத்திரிக்கு வழங்கப்படவுள்ள வரப்பிரசாதங்கள் குறித்து அதிருப்தி

Report Print Ajith Ajith in அரசியல்
483Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி பதவியின் பின்னர் வழங்கப்படவுள்ள வரப்பிரசாதங்கள் குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள யோசனை சட்டரீதியற்றது என்று சிவில் குழுக்கள் குறிப்பிட்டுள்ளன.

இதன்படி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்து விலகிய பின்னர் அவருக்கு ஜனாதிபதி மாளிகையை விட விசாலமான பரப்பைக்கொண்ட முன்னாள் பாகெட் மாவத்தையில் அமைந்துள்ள வீடு பொறுப்பளிக்கப்படவுள்ளது.

அத்துடன் அவருக்கு குண்டு துளைக்காத வாகனங்கள் வழங்கப்படவுள்ளன. இதனை தவிர இரண்டு மேசிடஸ் கார்கள் வழங்கப்படவுள்ளன. இவற்றின் பெறுமதி 285,000 டொலர்களாகும். அத்துடன் மேலதிக பாதுகாப்பும் அவருக்கு வழங்கப்படவுள்ளது.