நிதிச்சேகரிப்பு நடவடிக்கையின் போது விலகியிருந்த நீதிமன்ற நீதியரசர்கள்

Report Print Ajith Ajith in அரசியல்
117Shares

சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட நிதிசேகரிப்பு நடவடிக்கையில் இருந்து உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் விலகியிருந்துள்ளனர்.

கொழும்பு சங்கரிலா ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற சட்டமா அதிபர் திணைக்களத்தின் 135ஆவது வருடாந்த நிகழ்வில் இந்த நிதிச்சேகரிப்பு நடவடிக்கை நடைபெற்றுள்ளது.

சீனத்தூதரகம் அனுசரணை செய்திருந்த இந்நிகழ்வில் நீதியரசர்கள் அனைவரும் தனிப்பட்ட காரணங்களை கூறி பங்கேற்கவில்லை.

அத்துடன் தேர்தல் காலத்தையும் கருத்திற்கொள்ளாமல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அழைக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில், நிகழ்வின்போது சேகரிக்கப்பட்ட நிதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவுவதற்கு வழங்கப்படவுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.