வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி வேட்பாளர்

Report Print Thileepan Thileepan in அரசியல்
197Shares

ஜனசெத முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் வவுனியாவிற்கு விஜயம் செய்து இந்து ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

வவுனியா, றம்பைக்குளம் பகுதியில் உள்ள ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு இன்று விஜயம் செய்த அவர் அங்கு இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதுடன் ஆலயத்தில் இருந்த மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார் .

அங்கு கருத்து தெரிவித்த அவர்,

அனைவருக்கும் எனது தீபாவளி நல் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன். நாங்கள் தமிழ் , சிங்கள ,முஸ்லீம்கள் என்ற வேறுபாடு இல்லாமல் இலங்கையர் என்ற ஒற்றுமையுடன் வாழவேண்டும். அந்த ஒற்றுமையை வலியுறுத்துவதற்காகவே நாம் இங்கு வந்திருக்கின்றோம். இந்த நாடு புனிதமானது. சிறப்பானது பெருமைக்குரியது.

சிங்களவர்கள் இந்து ஆலயத்திற்கு வருவது போல, தமிழர்கள் பௌத்த ஆலயத்திற்கு வந்திருக்கின்றார்கள். அவர்களது கலாச்சாரங்களையும் பின்பற்றி கொள்கின்றார்கள்.

இந்த ஒற்றுமையை சிதைப்பதற்கு பல்வேறு வழிகளில் சதிகள் இடம்பெற்று வருகிறது.

அது அரசியல் சார்ந்தோ அல்லது சமூகத்தின் வேறு சிலவை சார்ந்தோ இருக்கலாம். இவற்றிற்கு இடம் கொடுக்காமல் நாம் ஒற்றுமையாக இருக்கவேண்டும். அந்த ஒற்றுமையை கலைப்பதற்கு யாரும் இடமளிக்க கூடாது. இந்த தேசம் பல்வேறு சர்ச்சைகளால் பிரிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. எனவே அதற்கு உடந்தையாக இருக்காமல், யாருடைய செயற்பாட்டிற்கும் காது கொடுக்காது அனைவரும் சமத்துவமாக இருக்க வேண்டும் என்றா

இதன்போது, ஒரே குடையின் கீழ் பாதுகாப்பான நாட்டை உருவாக்க தனக்கு வாக்களிக்குமாறு கோரிய அவர் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் தான் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த வழிபாட்டு நிகழ்வில் அவரது ஆதரவாளர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.