ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரசாரத்தில் வேகம் இல்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
அவரின் பிரசாரம் தொடர்பில் விளம்பரங்கள் மேற்கொள்ளப்படுகின்றபோதும் அவை பல்வேறு கோணங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.
இவை மக்கள் முன் உரியமுறையில் சென்று சேரவில்லை என்று பிரதமர் ரணிலின் தரப்பு தெரிவித்து வருகிறது.
இதனையடுத்து பிரசார நடவடிக்கைகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்து வருகிறார்.
எனினும் சஜித் பிரேமதாசவின் பிரசார நடவடிக்கைகள் உரிய வகையில் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரணிலின் முன்னாள் நெருங்கியவரும் சஜித்துக்கு தற்போது நெருக்கமானவருமான அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தெரிவித்துள்ளார்.