தீபாவளிக்கு தமிழில் வாழ்த்துத் தெரிவித்த நாமல்

Report Print Gokulan Gokulan in அரசியல்
216Shares

நாட்டு மக்கள் அனைவருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தமிழில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தமிழ் மொழியில் அவர் தீபாவளி வாழ்த்துக்களை பதிவிட்டு நாட்டு மக்களை வாழ்த்தியுள்ளார்.

குறித்த பதிவில், அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். இந்த மகிழ்ச்சியான தீப திருநாளில் இலங்கை மக்கள் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் எமது இலங்கை சொந்தங்கள் அனைவரின் வாழ்விலும், நலமும் வளமும் பெருகட்டும், வாழ்வு சிறக்கட்டும்,என பதிவிட்டுள்ளார்.

அவரின் தமிழ் மொழியிலான வாழ்த்திற்கு அவரது ஆதரவாளர்கள், மகிழ்ச்சி அண்ணா உங்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் என பதிலளித்துள்ளதுடன் அதனை ரீடுவிட் செய்துவருகின்றனர்.