நிதி மோசடிகளில் ஈடுபட்ட உயர்மட்டத்தினர் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Report Print Ajith Ajith in அரசியல்
274Shares

பணசுத்திகரிப்பு உட்பட்ட பல நிதிமோசடிகளில் ஈடுபட்ட உயர்மட்டத்தினர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளன.

நீதியமைச்சர் தலதா அத்துகோரள இதனை தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் நிதிமோசடி தொடர்பான காவல்துறையின் முன்னாள் தலைவரான வைத்யலங்காரவின் மனைவி உட்பட்ட உறவினர்களும் இந்த மோசடிகளில் தொடர்புபட்டுள்ளதாக காவல்துறையினர் கடந்த வாரம் கொழும்பு பிரதான நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடிகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடும்பத்தினருக்கு சம்பந்தமில்லை என்று முன்னதாக வைத்யலங்காரவின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் முடிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் கடந்த வாரத்தில் காவல்துறையினர் நீதிமன்றில் சமர்ப்பித்த அறிக்கையில் ராஜபக்ச குடும்பத்தினர் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச உட்பட்டவர்கள் இதுவரைக்காலமும் ராஜபக்ச குடும்பத்தினரை இந்த மோசடிகளில் இருந்து காப்பாற்றி வந்துள்ளனர்.

இதன்காரணமாகவே அரசாங்கத்துக்கு இந்த மோசடிக்காரர்களை இதுவரைக் காலமும் கண்டுபிடிக்கமுடியாமல் போனது.

எனினும் தற்போது ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட்ட ராஜபக்ச குடும்பத்தினர் மிக் விமானக்கொள்வனவு மற்றும் எவென்காட் ஆயுதக்களஞ்சியம் போன்ற மோசடிகளில் சம்பந்தப்பட்டுள்ளமை தொடர்பில் நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.