வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களின் வாக்கு சஜித்திற்கே! அலிஸாஹிர் மௌலானா

Report Print Navoj in அரசியல்
144Shares

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் தங்களது வாக்குகளை சஜித் பிரேமதாசவுக்கு வழங்குவதற்கு முடிவு செய்துவிட்டார்கள் என இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

ஓட்டமாவடியில் நேற்று இரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஏற்பட்ட நிர்கதியான சூழ்நிலையில் எங்களது ஆதரவை தொடர்ந்து தருவதற்கு, ஜனாதிபதி தேர்தல் வருகின்ற வேளை, ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளராக சஜித் பிரேமதாச தான் வரவேண்டும் என்று பிரதமரிடன் எமது தலைவர் ரவூக் ஹக்கீம் கூறியுள்ளார்.

இன்று சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் அன்னம் எங்கள் சின்னம். அதுவே வெற்றி பெறும் என்று எமது மக்கள் எதிர்பார்ப்புடன் இருந்து கொண்டிருக்கின்றார்கள்.

தென்னிலங்கையில் ஒவ்வொரு நாளும் சஜித் பிரேமதாசவிற்கு செல்வாக்கு அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. ஆனால், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு செல்வாக்கு இறங்கிக் கொண்டு செல்கின்றது.

எங்கள் தலைவர்கள் முடிவு செய்யாவிட்டாலும் எங்களது வாக்குகளை அன்னச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு என்று வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் முடிவு செய்து விட்டார்கள். சஜித் பிரேமதாசவுக்கே எமது வாக்கு என எங்களைப் பொறுத்தவரையில் எங்கள் தலைவர் அன்றே தீர்மானித்து விட்டார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.