அமெரிக்காவின் நன்மதிப்பை பெற தனிப்பட்டவருக்கு பெருந்தொகை பணம் வழங்கிய ராஜபக்ச அரசாங்கம்

Report Print Ajith Ajith in அரசியல்
319Shares

போரின் பின்னர் பின்னடைவு கண்ட, அமெரிக்க அரசாங்கத்தின் நன்மதிப்பை பெறுவதற்காக முன்னைய ராஜபக்ச அரசாங்கத்தினால் அமெரிக்க ஆலோசனை நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட பணத்தில் 87 வீதம் அந்த நிறுவனத்தின் உடன்படிக்கையாளர் இமாட் ஸூப்ரிக்கும் அவருடைய மனைவியின் தனிப்பட்ட செலவுகளுக்காக வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான ஆவணம் கடந்த வாரத்தில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஸூப்ரிக்கு இலங்கை அரசாங்கம் வழங்கிய பெருந்தொகை பணம் தொடர்பான தகவல் 2014ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.

இதன்படி ஸூப்ரிக்கான முழு நிதித்தொகையான 8.5மில்லியன் டொலர்களில் இலங்கை அரசாங்கம் 6.5 மில்லியன் டொலர்களை மாத்திரமே செலுத்தியிருந்தது.

இதில் 5.6 மில்லியன் டொலர்கள் ஸூப்ரிக்கும் அவருடைய மனைவிக்கும் நேரடியாக செலுத்தப்பட்டன.

இதனை இலங்கை மத்திய வங்கியே நேரடியாக அவருக்கு செலுத்தியுள்ளது.

இது நாடாளுமன்றத்தினால் அங்கீகாரம் வழங்கப்படும் முன்னரே வழங்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.