ஜனாதிபதியின் செலவுக்கு இத்தனை கோடி ரூபாவா? மறுக்கும் ஜனாதிபதி செயலகம்

Report Print Gokulan Gokulan in அரசியல்

எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதியின் தனிப்பட்ட தேவைகளுக்காக 800 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத்தின் குற்றச்சாட்டானது பொய்யானது எனவும் அந்த கருத்தை வன்மையாக எதிர்பதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

கடந்த 25ம் திகதி கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது விஜித ஹேரத் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார்.

அது அவ்வாறு இருக்க நிதி அமைச்சினால் முன்வைக்கப்பட்டுள்ள இடைக்கால வரவுசெலவில் ஜனாதிபதியின் செலவுக்காக 240 கோடி ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது.

பதவி வகித்த அல்லது பதவி வகிக்கும் ஒரு ஜனாதிபதிக்கு தனியார் செலவுகளுக்காக பணம் ஒதுக்கப்படமாட்டாது எனவும் அவ்வாறு ஒதுக்கினால் அந்த பணம் ஜனாதிபதி செயலகத்திதிற்கு ஒதுக்கப்படுமெனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.