பிள்ளையானின் விடுதலையே கிழக்கை மீட்கும்!

Report Print Navoj in அரசியல்
613Shares

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் விடுதலை மூலமே கிழக்கை மீட்க முடியும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு - வாழைச்சேனை, இளந்தளிர் விளையாட்டு மைதானத்தில் நேற்று மாலை, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து தேர்தல் பிரசார கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கை மீட்பதற்காக அனைவரும் நல்ல முடிவை எடுக்க வேண்டும். பிள்ளையானின் விடுதலையே கிழக்கை மீட்கும்.

மகிந்த ராஜபக்ச ஆட்சியில் கிழக்கு மாகாணத்தினை கட்டியெழுப்பினோம். மீண்டும் கிழக்கை கட்டியெழுப்புவதற்கு யார் தேவை? நாட்டிற்கு தலைமைத்துவம் யார் வழங்க முடியும்?

நாட்டின் தலைமைத்துவத்திற்கு பொறுத்தமானவர் கோத்தபாய ராஜபக்ச. எனவே, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு இலட்சம் வாக்குகளை வழங்கி மகிந்த ராஜபக்சவின் தரப்பினை பலப்படுத்தி அவரின் தலைமையில் நாட்டை பெற்றிப் பாதைக்கு கொண்டு செல்ல அனைவரும் முன்வருவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.