பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் அமைச்சர் பழனி திகாம்பரம், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை சந்திக்கவுள்ளார்.
இந்த வாரத்தில் இந்த சந்திப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வு வழங்கவுள்ளதாக உறுதியளித்துள்ள நிலையிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் ஐக்கியதேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான விடயமும் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.