மகிந்த மற்றும் மைத்திரி தலைமையில் புதிய கூட்டணி! வெளியாகியுள்ள தகவல்

Report Print Murali Murali in அரசியல்
233Shares

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்பவற்றுக்கிடையிலான கூட்டணியின் இணைத் தலைவர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆகியோர் செயற்படவுள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

இப்புதிய கூட்டணி தொடர்பிலான யாப்பு வெளியிடும் நிகழ்வு எதிர்வரும் 31ம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது. இதில், இரு தரப்பிற்கும் இடையிலான ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன என்பவற்றிலுள்ள கட்சிகள் இந்த கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ளன.

புதிய கூட்டணியின் சின்னமாக கதிரை பயன்படுத்தப்படவுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் இரு தரப்புக்களும் உடன்பட்டுள்ளன.

இந்த சின்னத்தின் கீழ் எதிர்வரும் எல்லாத் தேர்தல்களிலும் போட்டியிடவுள்ளதாக பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாச மேலும் கூறியுள்ளார்.