கோத்தபாயவுக்கு தவறிப் போன வாய்ப்பு! சந்திரிக்காவை எச்சரித்துள்ள மஹிந்த

Report Print Vethu Vethu in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச முக்கியமான ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளார்.

சந்திரிக்கா முன்னரை விடவும் தற்போதைய நிலையில் மிகவும் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். சரியான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதாக சந்திரிக்கா அறிவித்துள்ளார். இது தொடர்பில் சில தினங்களுக்கு முன்னர் உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திட்டார்.

சந்திரிக்காவின் இந்த செயற்பாட்டினை கண்டிக்கும் வகையில் மஹிந்த கருத்து வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு ஒன்றில் மஹிந்த இந்தத் தகவலை வெளியிட்டார்.

இதேவேளை கட்சியின் செயற்பாட்டுக்கு எதிராக செயற்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தலைமையிலான குழுவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ஜனாதிபதியானால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முழுமை அழிவடைந்துவிடும் என்றும், கட்சியை பாதுகாக்கும் நோக்கில் சஜித்துடன் இணைந்து கொண்டதாக சந்திரிக்கா அறிவித்திருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுக்கு ஆதரவு வழங்கியுள்ளதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் உடன்படிக்கை ஒன்றிலும் கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.