சந்திரிக்காவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டில் மைத்திரி!

Report Print Vethu Vethu in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான ஆலோசகரான முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை, அந்தப் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு சந்திரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளதை அடுத்தே, அவரை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய குழு கூட்டம் எதிர்வரும் செவ்வாய்கிழமை கூடவுள்ளது. இதன்போது சந்திரிக்காவை கட்சியில் நீக்கமாறு ஜனாதிபதி கோரிக்கை முன்வைக்கவுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் நடுநிலையாகச் செயற்படவுள்ளதாக அறிவித்திருந்த மைத்திரிபால சிறிசேன, அதுவரை கட்சியின் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். எனினும் தொடர்ந்தும் கட்சியின் செயற்பாடுகளில் அவர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி முழுமையான ஆதரவினை வழங்கியுள்ளது. இந்நிலையில் சந்திரிக்கா ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கியுள்ளமை கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.