கருணாவிற்கு கோத்தபாய வழங்கியுள்ள உத்தரவாதம்! வெளிவரும் தகவல்கள்

Report Print Sujitha Sri in அரசியல்

தான் ஜனாதிபதியானதும் ஒரு அரசியல் கைதியை கூட வைத்திருக்க மாட்டேன், கண்டிப்பாக விடுவிப்பேன் என ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச வாக்குறுதியளித்துள்ளார்.

தனக்கு கோத்தபாய இந்த வாக்குறுதியை வழங்கியதாக முன்னாள் பிரதியமைச்சரான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில்,

தமிழ் மக்கள் விழிப்புடன் சிந்தித்து கோத்தபாய ராஜபக்சவை வெற்றியடைய வைக்கின்ற போது தான் தமிழர்களின் இருப்பு பாதுகாக்கப்படும்.

தமிழ் மக்களை நம்பி அவர் இந்த தேர்தலில் இறங்கியிருக்கிறார். ஆகவே அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக பெரும்பாலான வாக்குகளை அவருக்கு அளித்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நான் தமிழர்களிடம் அன்பான கோரிக்கையொன்றை முன்வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.