கோத்தபாயவை மீண்டும் மீண்டும் வம்புக்கு இழுக்கும் சஜித்! இம்முறை கடிதம் அனுப்பிய ரணில் தரப்பு

Report Print Vethu Vethu in அரசியல்

புதிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதம் மூலம் கோத்தபாய ராஜபக்சவுக்கு சஜித் மீண்டும் சவால் விடுத்துள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விவாதத்திற்கு வருமாறு சஜித் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் விவாதத்திற்கு வருமாறு கோத்தபாய ராஜபக்சவை அழைத்த போதிலும் அவர் வருகைத்தரவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பகிரங்க விவாதத்தை கோத்தபாய தவிர்த்து வரும் நிலையில் மீண்டும் கடிதம் ஒன்றை ரணில் தரப்பினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.