ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரே ஜனாதிபதியான சஜித்

Report Print Sujitha Sri in அரசியல்

மங்கள சமரவீரவின் கருத்துகளை நாட்டில் பலர் எதிர்ப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

மங்கள சமரவீர எந்தவிதமான தயக்கமும் இன்றி இது சிங்கள பௌத்த நாடு அல்ல என்று கூறினார்.

ஜெனீவாவிற்கு சென்று இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டது என கூறிவிட்டு வந்தார்.

அடுத்ததாக அமெரிக்காவுடன் மில்லேனியம் சேலேஞ்ச் கோப்ரேஷன் உடன்படிக்கையை கைச்சாத்திடவுள்ளார்.

நாட்டில் மக்களின் பாரிய எதிர்ப்பிற்கு இலக்காகியுள்ள மங்கள சமரவீர தான் இந்த ஜனாதிபதி தேர்தலின் போது சஜித் பிரேமதாச ஜனாதிபதியின் அனைத்து பிரச்சார பணிகளையும் மேற்கொண்டு வருகிறார் என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்போது அவர், சஜித் பிரேமதாச ஜனாதிபதியின் என குறிப்பிட்ட கருத்து சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த நிலையில் ஜனாதிபதி தேர்தலுக்கு தோற்றி வெற்றி காணும் முன்னரே சஜித் பிரேமதாச கொழும்பில் ஜனாதிபதியாக்கப்பட்டுள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.