தமிழினம் தேசிய அலையாக உருவெடுக்குமாக இருந்தால்...

Report Print Malar in அரசியல்

ஒரு தேசிய அலையாக இந்த தமிழினம் உருவெடுக்குமாக இருந்தால் இவ்வளவு காலம் சிந்திய இரத்தங்கள், வேதனை, இழப்புக்கள், சவால்கள், அரசியல் ரீதியான போராட்டங்கள் அனைத்திற்கும் நாங்கள் என்ன சொல்லப்போகின்றோம் என சின்னய்யா மிஷன் சுவாமி நாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மக்கள் மன்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர்,

தமிழர்களாகிய எங்களுடைய வரலாறு நீண்டகாலமாக ஈழதேசத்திலே எதிர்கொண்டு இருக்கின்ற சவால்கள் யுத்தம் மௌனிக்கப்பட்ட பிற்பாடு இருக்கக்கூடிய சூழலிற்கு பின்னர் அனைத்து மக்களும் சமத்துவத்தோடு வாழவேண்டும் என்பதே.

ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு சாதாரண அடிப்படை வாழ்க்கையை வாழுகின்ற மக்களுடைய தேவையாக வேண்டுதலாக ஒற்றுமை தான் இருக்கின்றது.

தாங்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும். இந்த ஈழத் தமிழனம் ஒன்றுபட வேண்டும் என வேண்டுகிறது.

ஒன்றுபட்டால் ஒரு தேசிய அலையாக இந்த தமிழினம் உருவெடுக்குமாக இருந்தால் இவ்வளவு காலம் சிந்திய இரத்தங்கள், வேதனை, இழப்புக்கள், சவால்கள், அரசியல் ரீதியான போராட்டங்கள் அனைத்திற்கும் நாங்கள் என்ன சொல்லப்போகின்றோம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.