2019ஆம் ஆண்டு தேர்தல் வித்தியாசமானது!

Report Print Malar in அரசியல்

கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற தேர்தல்களை விட 2019ஆம் ஆண்டு தேர்தல் சற்று வித்தியாசமாக உள்ளது என தமிழ் மக்கள் கூட்டணியின் கொள்கை பரப்பு செயலாளர் அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் மன்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

கடந்த ஜனாதிபதி தேர்தல்களிலே தமிழ் மக்களுக்கு ஒரு தெரிவொன்று இருந்தது. ஒருவர் ஜனாதிபதியாக வரக்கூடாது என இருந்தாலும் அங்கு இனவாதம், பேரினவாதம் என்கின்ற ஒரு நிலைப்பாட்டில் மக்கள் தங்களது வேட்பாளர்களை தெரிவுசெய்கின்ற சூழல் ஒன்று காணப்பட்டதாக தான் நான் கருதுகின்றேன்.

இந்த சூழலிலே யார் வரக்கூடாது என அவர்கள் விரும்புகிறாரோ, அவருக்கு இலக்கு வைத்தாக தங்களுக்கு விருப்பமில்லாது இன்னொருவரை தெரிவு செய்கின்ற ஒரு சூழலிலே தான் அவர்கள் உள்ளாகியிருக்கின்றார்கள் என அவர் கூறியுள்ளார்.