அடுத்த ஜனாதிபதிக்கு ஜெனிவாவில் காத்திருக்கும் சிக்கல்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

எதிர்வரும் 19ஆம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்பவருக்கு ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் சவால்கள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் மாநாடு 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் கூடுகிறது.

இலங்கை இராணுவத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளமையானது கடும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதுடன், இது பெரும் சவாலாக இருக்கும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையானது உள்நாட்டு விவகாரம் என்றும் இதனை மாற்றுவதற்கோ அல்லது விமர்சிப்பதற்கோ வெளி நபர்களுக்கு இடமில்லை என்றும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் தெரிவித்துவருகின்றனர்.

எனினும் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் நியமனம் தொடர்பில் சர்வதேச நாடுகள் கடும் கோபத்தில் இருப்பதாகவும் இது தொடர்பில் வரும் மனிதவுரிமைகள் மாநாட்டில் கேள்விகள் எதிர்கொள்ள வேண்டிவரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெற்றிபெறும் ஜனாதிபதி வேட்பாளர் சர்வதேச சமூகத்திடம் கடுமையான அழுத்தங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என ஆங்கில ஊடகம் ஒன்று தகவல்கள் வெளியிட்டுள்ளது.