ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட மாநாடு

Report Print Theesan in அரசியல்

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட மாநாடு இன்று காலை நடைபெற்றுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா முதன்மை அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் திலீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ் மாநகர சபையின் முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராசா, சர்வதேச முக்கியஸ்தரான விந்தன், தேசிய அமைப்பாளர் பசுபதி சிவரத்தினம், கட்சியின் வவுனியா உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநாடு வவுனியாவில் முதன்முறையாக இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers