மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் நிதி தொடர்பில் உடன்படிக்கை செய்துக்கொள்ளப்பட்ட பின்னரே அது நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு உட்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கையில் நாட்டுக்கு பொருத்தமற்ற நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எதிரான அம்சங்கள் அடங்கியுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தி வருகிறது எனவே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அது கைச்சாத்திடப்படக்கூடாது என்று எதிர்க்கட்சி தெரிவித்து வருகிறது. இதனை ஜனாதிபதியும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
எனினும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்று அறிவித்துள்ளார்.
அமரிக்க தூதரகமும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் நாடாளுமன்றில் அது தொடர்பில் விவாதிக்கலாம் என்று தமது கருத்தை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த விடயம் எதிர்வரும் நாட்களில் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய இடத்தை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இந்த உடன்படிக்கை தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச இதுவரை எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பதை அரசியல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.