பொலிஸார் முன்னிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தாக்கிய பெண்கள் யார்?

Report Print Thileepan Thileepan in அரசியல்

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நடைபெற்ற போது எதிர்ப்பு தெரிவித்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரது வாகனத் தொடரணி மீது செருப்பால் தாக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது அங்கு நின்ற பொலிஸாருடன் சிவில் உடையில் நின்ற பெண்கள் மூவரும் காணாமல் ஆக்கப்பட்டோரை மடக்கிப் பிடித்துள்ளனர்.

இதனால் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.

சிவில் உடையில் மல்லுக்கட்டாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை பிடித்தவர்கள் யார் எனவும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தாம் மக்கள் பிரதிநிதிகளான இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை சந்திக்க சென்ற போது பொலிஸார் தடுத்து நிறுத்தினர். அவர்கள் கூட்டம் முடிந்ததும் சந்திப்பார்கள் எனவும் கூறினர்.

ஆனால் கூட்டம் முடிந்ததும் அவர்கள் எம்மை பொருட்படுத்தாது வாகனத்தில் பாதுகாப்புடன் சென்றனர். அப்போது அவர்களை வழிமறிக்க முற்பட்ட போது பொலிஸாருடன் இணைந்து சிவில் உடையில் மூன்று பெண்கள் எம்மை பிடித்தனர்.

அவர்கள் யார் என எமக்கு தெரியாது. எனவே இது தொடர்பில் விசாரணை செய்ய வேண்டும் எனவும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பெண்கள் மூவரும் பொலிஸார் என தெரியவருகின்றது.