ஐ.டி.என் தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சிக்கு நாளை முதல் தடை

Report Print Ajith Ajith in அரசியல்

ஐ.டி.என் தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சிக்கு நாளை (திங்கட்கிழமை) முதல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த தடையை தேர்தல்கள் ஆணைக்குழுவின் மற்றும் இரண்டு ஆணையாளர்கள் எதிர்த்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பான அரசியல் நிகழ்ச்சியான 'சீத்தல எரோ' வில் பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் அமைந்திருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஏனைய இரண்டு ஆணையாளர்களின் இணக்கமின்றி ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த தடையை விதித்துள்ளார்.

இதன்படி ஐ.டி.என் தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டுமெனில் முதலில் தமது தயாரிப்பை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி அனுமதிப் பெறவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

எனினும் ஏனைய ஆணைக்குழுவின் ஏனைய இரண்டு உறுப்பினர்களான ரட்னஜீவன் ஹூல், நளின் அபேசேகர ஆகியோர் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

சட்ட ஏற்பாடுகளின்படி ஆணைக்குழுவின் முடிவுகளுக்கு மூன்று உறுப்பினர்களும் இணக்கம் வெளியிடவேண்டும்.

எனினும் இந்த விடயத்தில் தாம் இரண்டு பேருக்கும் அறிவிக்காமலேயே மஹிந்த தேசப்பிரிய இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக ஆணையாளர்கள் இருவரும் குறிப்பிட்டுள்ளனர்.