ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் வவுனியாவில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சி மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை என தெரியவருகிறது.
வவுனியா, இரண்டாம் குறுக்குதெருவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இன்று குறித்த கலந்துரையாடல் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றதுடன், இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
காலை 10.30 இல் இருந்து மாலை 4.30 வரை இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன் மற்றும் சி.சிறீதரன் ஆகிய இருவரும் கலந்து கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கலந்துரையாடல் முடிவில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக தமிழரசுக் கட்சி தீர்மானம் நிறைவேற்றியிருந்தமை குறிப்படத்தக்கது.