இனவாதத்தினை ஒரு போதும் ஏற்கமாட்டோம்! அனுரகுமார திஸாநாயக்க

Report Print Kanmani in அரசியல்

சஜித் பிரேமதாச மற்றும் கோத்தபாய ஆகிய இருவரும் வடக்கு, கிழக்கு,தெற்கு திசைகளில் வாக்குகளை பெறுவதற்கான வெவ்வேறு மாற்று கருத்துக்களையும், இனவாத கருத்துக்களையும் தெரிவித்து வருவதாக தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு - அலுத்கடையில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஒவ்வொரு பகுதிகளிலும் மக்களின் வாக்குகளை குறி வைத்து சஜித் மற்றும் கோத்தபாய இனவாத கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.

ஆனால் மக்கள் சக்தி கூட்டணி எங்கு சென்றாலும் அனைத்து மக்களிடமும் ஒரே கருத்துக்களை மாத்திரமே கூறும்.

இனவாதத்தில் ஒரு போதும் அரசியல் மேற்கொள்ள மாட்டோம். இனவாதத்தினை ஏற்றுக்கொள்ளவும் மாட்டோம்.நாட்டினை அமைதியான முறையில் கொண்டு செல்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.