மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கையை இந்த வாரம் வெளியிட நிதியமைச்சு தீர்மானம்

Report Print Ajith Ajith in அரசியல்

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள மிலேனியம் செலேஞ் கோப்பரேசன் உடன்படிக்கையை இந்த வாரம் வெளியிடவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் எதிர்க்கட்சியின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.

மிலேனியம் செலேஞ் கோப்பரேசனின் 480 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்வதற்காக மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் தாம் வெளியுறவு அமைச்சராக இருந்தபோதே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

எனினும் 2015ம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியை இழந்த நிலையில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அதனை பெற்றுக்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

Latest Offers