சுதந்திரக் கட்சியை அழிக்க விட மாட்டோம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்க ஐக்கிய தேசியக் கட்சிக்கு முடியாது என சுதந்திரக்கட்சியின் பதில் தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.

மாத்தறை, ஹக்மன பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சில பெண் தலைவர்கள், வெளியில் இறங்கி ஏதேதோ பேச ஆரம்பித்துள்ளனர். இவற்றை எமது வெற்றி அறிகுறியாகவே பார்க்கின்றோம்.

யார் என்ன கூறினாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்க எவராலும் முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து சுதந்திரக் கட்சியை பாதுகாக்க முடியாது. எமது முன்னாள் தலைவர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து எதனையோ கூறுகிறார்.

பஞ்ச மஹா சக்திகளை உருவாக்கியவர் எஸ்.டப்ளியூ. ஆர்.டி பண்டாரநாயக்க. அவரது கட்சியை எந்த கட்சியாலும் அழிக்க முடியாது எனவும் லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.