தேர்தல் சட்டத்தை மீறி பாடசாலை மாணவர்களை தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுத்தும் பொதுஜன பெரமுன!

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் கடுமையான வகையில் தேர்தல் சட்டத்தை மீறி வருவதாகவும் தேர்தல் ஆணைக்குழு இது சம்பந்தமாக எவ்வித நடவடிக்கைகளையும் எடுப்பதாக தெரியவில்லை எனவும் சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சுதந்திரமாக தேர்தல் சட்டத்தை மீறி வருகிறது எனவும், பாடசாலை மாணவர்களையும் தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளனர்.

மெதமுலனவில் நேற்று முன்தினம் நடைபெற்ற டி.ஏ. ராஜபக்ச நினைவு நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் சீருடையுடன் கலந்துக்கொண்டமை தொடர்பான புகைப்படங்களையும் சுயாதீன தேர்தல் கண்காணிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.