மன்னார் ஆயர் இல்லம் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு சஜித் பிரேமதாச விஜயம்

Report Print Sujitha Sri in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று காலை மன்னார் ஆயர் இல்லம், திருக்கேதீஸ்வர ஆலயம் போன்ற இடங்களுக்கு விஜயம் செய்துள்ளார்.

அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அழைப்பின் அடிப்படையிலேயே இந்த விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஆயர் இல்லத்திற்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாச குழுவினர் மன்னார் ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

சுமார் அரைமணிநேரம் நீடித்த இந்த சந்திப்பில் மன்னார் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் பின்னர் மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆகியோர் ஆலயத்தின் அறங்காவலர்கள் மற்றும் ஆலய குருக்களை சந்தித்துள்ளனர்.

திருக்கேதீஸ்வர ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய ஆலய கட்டட நிர்மாணப்பணிகளையும் இவர்கள் பார்வையிட்டுள்ளனர்.