8 நாட்கள் மட்டுமே பதவியில் இருப்பேன்: மைத்திரிபால

Report Print Steephen Steephen in அரசியல்

இராணுவ தலைமையகம் அமைந்திருந்த இடம் ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்காக விற்பனை செய்யப்பட்டதால், அங்கிருந்த அலுவலகங்களை அரச மற்றும் தனியார் கட்டிடங்களை வாடகைக்கு பெற்றுக்கொண்டதன் காரணமாக அரசாங்கத்திற்கு மாதாந்தம் 42 மில்லியன் ரூபாய் செலவானதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அகுரேகொட பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய முப்படை தலைமையகத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

கொழும்பு நகரில் புதிய திட்டத்தை உருவாக்க இராணுவ தலைமையகம் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

புதிய இராணுவ தலைமையகத்தை நிர்மாணிக்கும் பணிகள் 2011 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. திறைசேரி பணத்தை ஒதுக்க நிதி பிரச்சினைகள் இருந்ததால், நிர்மாணிப்பு பணிகள் தாமதமடைந்தன.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் கடற்படை மற்றும் விமானப் படை தலைமையங்களின் நிர்மாணிப்பு பணிகள் நிறைவடையும். திறைசேரி உரிய நேரத்தில் பணத்தை வழங்கினாலேயே அதனை துரிதமாக நிர்மாணித்து முடிக்க முடியும்.

நாட்டில் இயற்கை அனர்த்தம் ஏற்பட்ட போது இராணுவத்தினர் ஆற்றிய பணிகள் அளப்பறியது. கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி கடந்த தாக்குதலை தடுத்திருக்க முடியும் சிலரது தவறு காரணமாக அதனை தடுக்க முடியாமல் போனது. எதிர்காலத்தில் அப்படியான சம்பவங்கள் நடக்காதவாறு செயற்பட வேண்டும்.

இன்னும் 8 நாட்களில் நான் ஜனாதிபதி பதவியில் விடை பெறவுள்ளேன். கடந்த காலத்தில் முப்படையினர், பொலிஸார் எனக்கு வழங்கிய ஒத்துழைப்புகளுக்கு விசேட நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.