தெளிவாகியுள்ள சஜித் பிரேமதாசவின் வெற்றி! காரணத்தை பகிரங்கப்படுத்தியுள்ள அமைச்சர்

Report Print Steephen Steephen in அரசியல்

கடந்த மூன்று தினங்களில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பலர் அவருடன் இணைந்துள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் அவரது வெற்றி தெளிவாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை கூறியுள்ளார்.

முதலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பனவும் இதுவரை தீர்மானங்களை எடுக்காது இருந்த மத்திய வகுப்பு மக்களும் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்க இணைந்துள்ளதாக கூறியுள்ளார்.