நாமலுக்கு சவால் விடுக்கும் சஜின் வாஸ்

Report Print Steephen Steephen in அரசியல்

2010 -2015 ஆட்சிக்காலத்தில் ஊழல், மோசடிகள் பற்றி பேச தயாராக இருப்பதாகவும் தான் அறிந்த சகலவற்றையும் வெளியிட போவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

அம்பலந்தோட்டையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார். என்னுடன் விவாதம் ஒன்றுக்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச உள்ளிட்டோருக்கு சவால் விடுக்கின்றேன்.

2010-2015 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நடந்த ஊழல், மோசடிகள் பற்றி பேச நான் தயாராக இருக்கின்றேன். நான் நிரபராதி ஆக வேண்டும் என்பதே இதற்கு காரணம். அனைவரும் என்னையே திருடன் என்கின்றனர்.

ரோஹித்த அபேகுணவர்தன, ஷெயான் சேமசிங்க, காஞ்சன விஜேசேகர, நாமல் ராஜபக்ச வாருங்கள் என்னுடன் விவாதம் நடத்துவோம். 2010-2015 ஆம் ஆண்டுகளில் நடந்த ஊழல், மோசடிகள் பற்றி பேசுவோம்.

எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் இது நடக்க வேண்டும். யார் ஆடை கழன்று போவார்கள் என்பதை பார்ப்போம். அச்சமில்ல என்றால் விவாதத்திற்கு வாருங்கள் என சஜின் வாஸ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.