கிளிநொச்சி தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சஜித் வழங்கிய வாக்குறுதிகள்

Report Print Suman Suman in அரசியல்

புதிய ஜனநாயக முன்னணயின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்துகொண்ட தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று கிளிநொச்சி பசுமை பூங்காவில் இடம்பெற்றது.

மதியம் ஒரு மணிக்கு கிளிநொச்சிக்கு வருகை தந்த ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மக்கள் முன் ஆற்றிய தனது பிரச்சார உரையில் தான் ஜனாதிபதியாக வந்தால் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்களை பற்றி மாத்திரமே உரையாற்றினார்.

ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுக்கும் ஒவ்வொரு கைத் தொழில் பேட்டைகள், முன்பள்ளி கல்வி அபிவிருத்தி, விவசாயிகளுக்கு முற்றிலும் இலவசமாக உரம் வழங்கல், கடற்றொழில் அபிவிருத்தி, கலாசார மண்டபம் அமைத்தல், உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்த அவர்,நாட்டில் உள்ள அனைத்து மக்களும் இனம், மதம், மொழி பேதங்களை கடந்து ஒற்றுமையாக வாழ தன்னை ஜனாதிபதியாக தெரிவு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.

இக் கூட்டத்தில் அமைச்சர்களான மனோகணேசன், றிசாட் பதியூதீன், விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சுவாமிநாதன் மற்றும் பெருமளவான பொது மக்கள் கலந்து கொண்டனர்.