சபாநாயகர் கரு ஜயசூரிய விடுத்துள்ள விசேட அறிவித்தல்

Report Print Kamel Kamel in அரசியல்

சபாநாயகர் கரு ஜயசூரிய, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 11ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் 11ஆம் தகிதி முற்பகல் 11.30 மணியளவில் நாடாளுமன்ற விசேட அமர்வு நடைபெறவுள்ளது.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்த அமர்வில் பங்கேற்குமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய கோரியுள்ளார் என நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த நாடாளுமன்ற அமர்வு குறித்த விசேட வர்த்தமானி அறிவித்தலை சபாநாயகர் நேற்றைய தினம் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers