ரணில் மீண்டும் பிரதமராக பதவி ஏற்பதில் சிக்கல் இல்லை - அகில விராஜ்

Report Print Steephen Steephen in அரசியல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக பதவி வகிப்பதில் எந்த தடையும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கல்வியமைச்சில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ள தலைவர் பிரதமராக தெரிவு செய்யப்படுவார். அதில் எந்த சிக்கலையும் ஏற்படுத்திக்கொள்ள அவசியமில்லை. ரணில் விக்ரமசிங்க அனுபவமிக்க அரசியல் தலைவர் எனவும் அகில விராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers