போலி காணொளியை வெளியிட தயாராகும் சஜித் தரப்பு! விமல் வீரவங்ச

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி வேட்பாளர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அல்லது வேறு ஒரு தரப்பினரை பயன்படுத்தி, அவரது இரண்டாவது விருப்பு வாக்கை கோத்தபாய ராஜபக்சவுக்கு வழங்குமாறு கூறும் போலி காணொளி ஒன்றை சஜித் பிரேமதாசவின் தரப்பு தயாரித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

பொலன்நறுவையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவை பயன்படுத்தி இரண்டாவது விருப்பு வாக்கை கோத்தபாய ராஜபக்சவுக்கு வழங்குமாறு அறிவிக்க உள்ளனர். குறிப்பாக சஹ்ரானின் அடிப்படைவாதத்திற்கு பால் ஊட்டிய எந்த அடிப்படைவாதியின் விருப்பு வாக்கையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

அவர்களின் இரண்டாவது விருப்பு வாக்கோ முதலாவது விருப்பு வாக்கோ எதனையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எதிர்வரும் நாட்களில் ஹிஸ்புல்லா அல்லது வேறு ஒரு அரசியல்வாதி அல்லது அவரை போன்ற தோற்றம் கொண்டவரை பயன்படுத்தி இரண்டாவது வாக்கை கோத்தபாயவுக்கு வழங்குமாறு தெரிவிக்கும் காணொளியை வெளியிடுவார்கள்.

இது எமது தேவைக்காக இது வெளியாக போவதில்லை. இதனை மக்கள் நம்பக் கூடாது எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers