சஜித்தின் பிரச்சார மேடையில் மனோ - ரிசாட் அணியினரிடையே முறுகல்

Report Print Banu in அரசியல்

மன்னாரில் இன்று நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரச்சார கூட்டத்தின் போது, அமைச்சர்கள் மனோ கணேசன், ரிசாட் பதியுதீன் ஆகியோரது அணியினர் இடையே முறுகல் நிலை தோன்றியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன..

மன்னார் பிரசார கூட்ட ஏற்பாட்டுக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனுக்கும், அமைச்சர் மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி/தமிழ் முற்போக்கு கூட்டணியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ஜனகன் விநாயகமூர்த்திக்கும் இடையிலேயே குறித்த முறுகல் ஏற்பட்டுள்ளது .

நேற்றிரவிலிருந்து, மன்னார் கூட்டம் தொடர்பில் பதாகைகள் அமைப்பது, சுவரொட்டிகள் ஒட்டுவது போன்ற விடயங்களில் ஏற்பட்ட முரண்பாடுகளை தொடர்ந்து, மேடையில் ஜனகன் விநாயகமூர்த்திக்கு அமர இடம் ஒதுக்க முடியாது என அமைச்சர் ரிசாட் அணியினர் மறுத்ததை அடுத்து மேடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது.

Latest Offers