சஹ்ரானின் மனைவியை வைத்து கோத்தபாயவுக்கு எதிராக சதி! 13ஆம் திகதி கசியவுள்ள வீடியோ

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவியை வைத்து, கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராகவும், எமது தரப்புக்கு எதிராகவும் சேறுபூசும் வகையில் வீடியோ ஒன்று தயாரிக்கப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

நாவலப்பிட்டிய பகுதியில் நேற்றையதினம் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றியீட்டுவது உறுதியாகிவிட்டது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோல்வியை தாங்கிக் கொள்ள புதிய ஜனநாயக முன்னணியினருக்கும், ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் முடியாது. ஆகையால் எமக்கெதிராக சேறுபூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன் ஓர் பகுதியாக ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவியை வைத்து வீடியோ ஒன்று தயாரிக்கப்படுகின்றது.

அந்த வீடியோவை, நவம்பர் 13ஆம் திகதியன்று கசியவிடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். அதன் ஊடாக சஹ்ரானுக்கும், கோத்தபாய - மகிந்தவுக்கும் இடையில் நெருங்கிய உறவொன்று இருந்ததாக காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றனர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.