சஜித்தின் வெற்றிக்காக சந்திரிக்காவின் புதிய தந்திரோபாயம்!

Report Print Vethu Vethu in அரசியல்

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாஸவை வெற்றி பெற செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நாடு முழுவதும் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடவுள்ளார்.

அதற்கமைய எதிர்வரும் வாரம் முழுவதும் முடிந்தளவு மக்கள் சந்திப்புகளை நடத்துவதற்கு சந்திரிக்கா நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரையில் சந்திரிக்கா, சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார்.

எப்படியிருப்பினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கோத்தபாய ராஜபக்சவுக்கு முழுமையான ஆதரவு வழங்கி வருகிறது. இந்நிலையில் சந்திரிக்கா தனித்து போராடி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.