மக்கள் சக்தி அமைப்பால் மட்டுமே இனவாதத்தை ஒழிக்க முடியும்: வசந்த சமரசிங்க

Report Print Steephen Steephen in அரசியல்

இனவாதத்தை ஒழிக்கக் கூடிய ஒரே அரசியல் அமைப்பு தேசிய மக்கள் சக்தி அமைப்பு என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபை உறுப்பினரும் அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

மீரிகம கல்ஹெலிய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

பல்வேறு நபர்கள் நாட்டில் பொய்யான கருத்துக்களை உருவாக்கி வருகின்றனர். தேசிய மக்கள் சக்தி அமைப்பு நாட்டில் பிரபலமடைந்து வருகிறது.

திசை காட்டி சின்னத்தை வெளியிட்டு ஒரு மாதம் கடந்துள்ளது. மொட்டுச் சின்னம் இருந்தாலும் அன்னப் பறவை சின்னம் இருந்தாலும் நாட்டின் கவனத்தையும் மக்களின் நம்பிக்கையையும் திசைக்காட்டி சின்னமே வென்றெடுத்துள்ளது.

நாட்டில் இனவாதத்திற்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த அரசியல் அமைப்பு தேசிய மக்கள் சக்தி அமைப்பு. அதனை மேலும் வலுப்படுத்துவது அனைவரதும் கடமை. திசைக்காட்டி சின்னத்திற்கு வாக்களிப்பது என்பது இனவாதத்திற்கு எதிராக வாக்களிப்பதாகவும் எனவும் வசந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.