அரசியல் கைதிகளின் விடுதலையில் கரிசனை கொள்ளவில்லை என்பது பொய் பிரச்சாரம்: சிவமோகன்

Report Print Theesan in அரசியல்

அரசியல் கைதிகள் 130 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் அவர்கள் தொடர்பில் கரிசனை கொள்ளவில்லை என்பது பொய் பிரசாரம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த தேர்தலில் தமிழர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். தமிழர்கள் தங்களது வாக்குகள் வீணாகாத வகையில் ஜனநாயக கடமையை சரியாக செய்ய வேண்டும்.

இங்கு வாக்களிக்க வேண்டாம் என கூறுவோரும் வாக்கு சீட்டை நிராகரிக்கும் வகையில் பாவியுங்கள் என கூறுபவர்களும் சில்லறையாக இருந்து கொண்டு எங்களுக்கு வாக்களியுங்கள் என்பவர்களும் அராஜகத்தனமகவும் வஞ்சகத்தனமாகவும் மக்களை தள்ளி விடுபவர்களாகவே இருப்பார்கள்.

எனவே மக்கள் இதில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இருவர்தான் இதில் பிரதானமானவர்கள்.

எனவே எவரை வெல்ல வைத்தால் நீங்கள் நிம்மதியாக வாழலாம் என்பதனை நினையுங்கள்.

எனவே தமிழர்கள் தவறான முடிவை எடுப்பார்களானால் அவர்கள் தாங்களாகவே அராஜக முறைக்குள் போய் விழுந்தவர்களாக ஆவார்கள் காணிகள் விடுவிக்கப்படவில்லை என்பது பொய்யான கருத்து.

காணிகள் பெருந்தொகையாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முயற்சியால் விடுவிக்கப்பட்டன. இன்னும் சில காணிகள் விடுவிக்கப்பட இருக்கின்றது.

அரசியல் கைதிகளாக அடைக்கப்பட்ட இருநூறுக்கும் மேற்பட்டவர்களில் தற்போது இருப்பது 80 பேர் மாத்திரமே. 130 அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசியல் கைதிகளை பார்க்கவில்லை என்பது எமக்கு எதிரான பொய் பிரசாரம் என மேலும் தெரிவித்தார்.