சஜித்தை ஆதரித்து கூட்டமைப்பு சூறாவளிப் பரப்புரை!

Report Print Rakesh in அரசியல்

'அன்னம்' சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, நாளை சனிக்கிழமை தொடக்கம் அவருக்கு ஆதரவான பரப்புரைகளை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முழுவதும் முன்னெடுக்கவுள்ளது.

தொடர்ந்து 4 நாட்கள் பரப்புரைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. முதல் இரு நாட்களும் வடக்கிலும், அடுத்த இரு நாட்களும் கிழக்கிலும் பரப்புரைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முதலாவது கூட்டம் வவுனியாவிலும் அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் என்று வடக்கில் இடம்பெறும். இந்தப் பரப்புரைக் கூட்டங்களில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கலந்துகொள்ளவுள்ளார்.