நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இதுவே காரணம்! மகேஸ் சேனாநாயக்க

Report Print Murali Murali in அரசியல்

“இந்த நாட்டு அரசியல் தொடர்பில் இளைஞர்கள், மக்கள் மிகவும் விரக்தியில் உள்ளார்கள். பல வருடங்களாக இந்த முறையினால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சிறிய குழந்தைகள் தொடக்கம் பெரியோர்கள் வரை பாதிப்புக்குள்ளாகியுள்ளார்கள். இவ்வாறான சூழ்நிலையிலேயே தேசிய மக்கள் இயக்கம் மூலம் நான் போட்டியிட முன்வந்துள்ளேன்.”

இவ்வாறு ஜனாதிபதி வேட்பாளர் மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

இந்நாட்டின் பிரதான இரண்டு கட்சிகளும் இதுவரை செய்தவைகளும் இனி செய்யப்போவதாக கூறுபவை குறித்தும் மக்களிடம் பெரும் பீதி ஏற்பட்டுள்ளது.

அந்நிலைமையின் கீழ் நாட்டை மாற்றுவதற்காகத் தான் எம்போன்றோர் போட்டியிட முன்வந்துள்ளோம்.

இந்நாட்டின் அரசியல் கலாசாரம் முறைகளை மாற்றி மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுத்து ஊழல்கள், கள்வர்கள், மோசடியாளர்கள் இல்லாத உரிமையொன்றை மக்களுக்கு பெற்றுக்கொடுக்கவே எம்போன்றோர் முன்வந்துள்ளோம்.

அதற்காக செயல்திட்டங்கள் பல எம்முடம் உள்ளன. அதிகாரத்திற்கு வந்தால் அவற்றை மக்களுக்கு ஏற்றவாறு செயல்படுத்துவோம். ” என அவர் மேலும் கூறியுள்ளார்.