இறுதிக்கட்ட நேரத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தும் கோத்தபாய!

Report Print Vethu Vethu in அரசியல்

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மூவர் அரசியல் தீர்மானம் எடுப்பதற்கு தயாராகி வருவதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா, மயந்த திஸாநாயக்க, விஜேபால ஹெட்டிஆராச்சி ஆகியோரே இவ்வாறு தீர்மானம் எடுக்க தயாராகி வருகின்றனர்.

அத்துடன் அமைச்சர் லக்ஷ்மன் கிரிஎல்ல அதிரடி தீர்மானம் ஒன்றை மேற்கொள்வதற்கு ஆயத்தமாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இவர்கள் சஜித் பிரேமதாஸவின் வெற்றிக்காக போராடும் போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயவுடன் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளதாக குறித்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.