கருத்து கணிப்புகளில் ஏற்படும் திடீர் மாற்றங்கள்! கடும் போராட்டத்தில் கோத்தபாய - சஜித்

Report Print Vethu Vethu in அரசியல்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இன்னும் 7 நாட்கள் உள்ள நிலையில் அது தொடர்பான கருத்துக் கணிப்புக்களில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இரு வேட்பாளர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், கருத்து கணிப்பு முடிவுகளுக்கும் நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகின்றன.

அதற்கமைய கடந்த 4 நாட்களில் பிரதான வேட்பாளர்களான சஜித் பிரேமதாஸ மற்றும் கோத்தபாய ராஜபக்ஷ தலா இரு தடவைகள் முன்னிலை வகித்துள்ளனர்.

இந்நிலையில் வெற்றியை உறுதி செய்ய முடியாத அளவிற்கு இரு தரப்பினருக்கும் இடையில் கடும் போட்டி தன்மை நிலவி வருகிறது.

உள்ளூர் மற்றும் சர்வதேச ரீதியான கருத்துக் கணிப்புகளுக்கு அமைய இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

2015ஆம் ஆண்டு மற்றும் நடப்பு ஜனாதிபதி தேர்தலிலும் சீனா மற்றும் இந்தியாவின் நேரடி தலையீடுகள் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.