மகிந்த - கருணாவுக்கு இடையில் இரகசிய உடன்பாடு! சஜித் விடுத்துள்ள சவால் - பத்திரிகை கண்ணோட்டம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச தன்னுடன் விவாதத்திற்கு வரவில்லை என்பதால், தன்னிடம் உள்ள கேள்விகளுக்கு மகிந்த ராஜபக்ச பதிலளிக்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு பகிரங்க சவால் ஒன்றை விடுத்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையானுடன் ஏற்படுத்திக் கொண்ட இரகசிய உடன்பாடு என்ன?. எந்த அடிப்படையில் வரதராஜ பெருமாள், கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குகிறார்?. கருணா அம்மானுடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்பாடு என்ன?. என பல கேள்விகளை சஜித் பிரேமதாச, மகிந்த ராஜபக்சவிடத்தில் முன்வைத்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக தகவல்களைத் தாங்கி வருகின்றது இன்றைய சிங்கள பத்திரிகைகளின் கண்ணோட்டம்,