கோத்தபாய அரச துரோகம் செய்துள்ளார்: பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை அரசு குற்றம் செய்துள்ளதாக அமெரிக்க நீதிமன்றத்தில் உறுதிப்படுத்திய கோத்தபாய ராஜபக்ச, அரச துரோகம் என்ற குற்றத்தை செய்துள்ளதாகவும் இது குறித்து துரிதமான விசாரணை நடத்துமாறு கோரி பதில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளரும் சட்டத்தரணியுமான நாமல் ராஜபக்ச இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவை கொலை இலங்கை அரசின் செயல் அல்ல என்பது தெளிவான விடயமாக இருக்கும் போது, தண்டனையில் இருந்து தப்பிக்க கோத்தபாய ராஜபக்ச அந்த கொலை இலங்கை அரசின் செயல் கூறியுள்ளார்.

இதன்மூலம் இலங்கை அரசு மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களை செய்யும் அரசு என சர்வதேசத்திற்கு மத்தியில் அவமதிப்புக்கு உள்ளாக்கி சர்வதேச பொருளாதார தடைகள் விதிக்கப்படலாம் எனவும் நாமல் ராஜபக்ச தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.